Advertisement
சினிமா செய்திகள்விமர்சனம்

எப்படி இருக்கிறது பேட்ட படம் ஒரு பார்வை…!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படம் இன்று திரைஅரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. பேட்ட படம் எப்படி இருக்கிறது. 2.0 படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ரஜினியின் படத்தை தயாரித்துள்ளது சன் பிக்சர்ஸ். சங்கரின் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டத்தில் பல கோடிகளை வசூலித்தது 2.0. அந்த சாதனையை முறியடிக்க மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சனத், சிம்ரன், பாபி சிம்ஹா கார்த்திக் சுப்பராஜ் கதை, திரைக்கதை, லாஜிக் என்பதையெல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு, ‘மீண்டும் ஒரு தலைவர் படம்’.. இப்படித்தான் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அந்தளவிற்கு ரஜினியின் பழைய துள்ளல், காமெடி, ஆக்‌ஷன் என அதிக எனர்ஜியோடு வெளிவந்திருக்கிறது தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், ரஜினி இதில் நடித்திருக்கும் போது ரசிக்க வைக்கிறது.
பேட்ட.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற டைட்டில் கார்டுக்கே எந்த அளவு விசில் மற்றும் ரசிகர்களின் ஆரவாரம் கேட்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடந்த 40 ஆண்டுகளாக இந்த பெயர், அவரது பெயரிலேயே இருக்கும் காந்த சக்தி உள்ளிட்டவை அனைவரையும் சுண்டி இழுக்கிறது. ரஜினிகாந்த் என்ற டைட்டில் கார்டுக்கே எந்த அளவு விசில் மற்றும் ரசிகர்களின் ஆரவாரம் கேட்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. கல்லூரி விடுதி ஒன்றில் வார்டனாக சேரும் ரஜினி, துவக்கத்தில் சிம்ரனுடன் ரொமேன்ஸ், பாபி சிம்ஹா அடியாட்களுடனான பில்டப் பைட், டூயட் எல்லாம் முடிந்து, பின்னர் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றத் துடிக்கிறார் ரஜினி. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான நவாஸுதீன் சித்திக் மற்றும் அவரது மகன் விஜய் சேதுபதியை பழிவாங்கத் துடிக்கிறார் ரஜினி. இது ஏன், எதற்கு என்பதற்கு பல காலத்து பழிவாங்குதல் கதை ஒன்றை கூறுகிறார் ரஜினி. எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. முதல் பாதி முழுவதும் கொஞ்சம் முதுமை தெரிகிறது ரஜினி முகத்தில். ஆனால், அது காரணமாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இடைவேளையின் போது பிளாஷ்பேக் ஆரம்பமாகும்போது புரிகிறது. கபாலி மற்றும் காலாவில் ரஜினியை வயதான தோற்றத்தில் பார்த்து கவலைப்பட்ட ரசிகர்களுக்கு விருந்தாக, கலர்புல் காஸ்ட்யூமில் ரஜினி கலக்கியிருக்கிறார்.
இத்தனை  கதாபாத்திரங்களை எதற்கு வைத்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. வில்லன் நவாசுதீன் கதாபாத்திரத்தை பாட்ஷா ஆண்டனிபோல மாற்ற கார்த்திக் முயன்றிருக்கிறார். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை. சுப்பாராஜின் டிரேட்மார்க் கிளைமாக்ஸ் டுவிஸ்டிக்கு மட்டுமே பயன்படுகிறார் விஜய் சேதுபதி.  பல வருடங்களுக்குப் பின்னர் ரசிகர்களுக்குத் தீனி போடும் வகையில் மாஸ், ஸ்டைல், டூயட் மற்றும் விளையாட்டுத்தனமான காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார் ரஜினி. அரசியல் நெடி இல்லாமல் முழுக்க முழுக்க ரஜினியின் பொழுதுப்போக்குப் படம் இந்த பேட்ட. ரஜினி ரஜினியாக.!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close