Advertisement
சினிமா செய்திகள்விமர்சனம்

எப்படி இருக்கிறது விஸ்வாசம் படம் ஒரு பார்வை…!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கிராம பின்னணியில் அமைந்துள்ள கதைக்களம். வெள்ளை சட்டை, வேட்டி, பச்சைநிற ரேபான் ஏவியேட்டர் கூலிங் கிளாஸ், வெண்நிற தலைமுடி, மீசை, தாடியுடன் காட்சியளிக்கிறார் தூக்குதுரையாக வரும் தல அஜித். சிவா படத்துக்கே உரிய டெம்ப்ளேட். கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். நயன்தாரா, தான் செல்லும் இடங்களில் எல்லாம் அஜித் யாருடன் சண்டையிட்டு கொள்வதையே பார்க்கிறார். இதற்காக அவர் காவல் நிலையம் செல்லும் நயன்தாராவிற்கு மோதலில் காதல் மலர்கிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் – நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார். பின்னர் குடும்பத்தினரின் அறிவுரையின்பேரில் மனைவி, மகளைப் பார்க்க மும்பை செல்கிறார். அங்கு அவரது மகளை கொல்லத்துடிக்கும் வில்லன் ஜகபதி பாபுவிடம் இருந்து மகளை எவ்வாறு காக்கிறார் என்பதே விஸ்வாசம் கதை. அனைத்து கதாபாத்திரத்துக்கும் சரிசமமாக முக்கியத்துவம் அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. அஜித் தனது மகளுடனான கெமிஸ்ட்ரி பக்க பலம். மொத்தத்தில் விஸ்வாசம் குடும்ப எமோஷனாக அனைத்து தரப்பினரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close