Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

கடல்’ படத்திற்கு பிறகு மீண்டும் கைகோர்க்கும் பிரபல நடிகர்கள்…!

பிரபல நடிகர் அரவிந்த் சாமி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்த படம் ‘கடல்’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், துளசி நாயர், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கி வரும் இயக்குநர் நிர்மல் குமார் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எக்செட்ரா பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் எக்செட்ரா நிறுவனம் தற்போது நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ மற்றும் ஹன்சிகாவின் ‘மஹா’ படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close