Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

கதாநாயகியே இல்லாமல் உருவாகும் ‘தீமைதான் வெல்லும்’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் இயக்குநராக ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இதனையடுத்து இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கினார். இதில் ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்கள் இரட்டை அர்த்த காமெடி படங்கள். ‘பலே பலே மகாடிவோய்’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘கஜினிகாந்த்’ திரைப்படம். இந்நிலையில் இயக்குநர் சந்தோஷ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். ‘தீமைதான் வெல்லும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் சஸ்பென்ஸ் நிறைந்த திகில் படமாக உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகிகளே இல்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close