Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தில் கபடி வீரராக களமிறங்கும் அதர்வா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக் இருப்பவர் வாரிசு நடிகர் அதர்வா. ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘பரதேசி’, ‘இரும்பு குதிரை’, ‘சண்டிவீரன்’, ‘இமைக்கா நொடிகள்’ என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பூமராங்’ படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் தல அஜித் ரசிகராக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் குறித்து இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறுகையில், “இந்த படத்தின் கதைப்படி நடிகர் அதர்வா ஒரு கபடி வீரர். அஜித்தின் தீவிர ரசிகரான அவர் ஆடுகிற ஆட்டம் தான் ‘குருதி ஆட்டம்’. இந்த படத்தில் பிரியா பவானி சங்கருக்கு 💪🏻வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளோம். பெரும்பாலான 🎞காட்சிகளை படமாக்கிவிட்டோம். இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது” என்று அவர் கூறினார். இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close