Advertisement
விமர்சனம்

கூட்டாளி

நடிப்பு: சதிஷ், கிருஷ்ண குருப், கல்யாண் மாஸ்டர், அருள்தாஸ், அப்புகுட்டி, கலாலார்சன், அனுப்ராஜ், நந்தகுமார்
ஒளிபபதிவு: சுரேஷ் நடராஜன்
இசை: பிரிட்டோ மைக்கல்
தயாரிப்பு: பி.பெருமாள்சாமி, எஸ்.சுரேஷ்பாபு
இயக்கம்: எஸ.கே.மதி
சேட்டுவிடம் கடன் வாங் கார் வாங்கியவர்கள் டியூ கட்டாதநிலையில் அவர்களின் கார்களை  பறிமுதல் செய்துகொண்டு வரும் அடியாட்கள் வேலை செய்கின்றனர் சதிஷூம் அவரது கூட்டாளிகளும். ஒருமுறை காரை பறிமுதல் செய்துகொண்டு வரும்போது ஹீரோயின் மீது மோதிவிட்டு எஸ்ஸாகிறார் சதீஷ். மனம் உறுத்திக்கொண்டே இருந்த நிலையில் அப்பெண்ணை வேறு இடத்தில் காண்கிறார். அவரிடம் சென்று மன்னிப்பு கேட்க உடனிருக்கும் தோழிகள் சதீஷை திட்டி அனுப்புகின்றனர். அதைக்கண்டு வருந்தும்  ஹீரோயினுக்கு சதீஷ் மீது பரிதாபம் ஏற்படுகிறது. அடிக்கடி சந்திப்பில் இது காதலாக மாறும் நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள்தான் ஹீரோயின் என்ற விவரம் தெரியவருகிறது. இதற்கிடையில் கார் கடத்தி வரும் பிரச்னையில் ரவுடிகளுடன் சதீஷும் நண்பர்களும் மோத வேண்டிய சூழல். மகளை காதலிக்கும் சதீஷ் மீது வஞ்சம் வைக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். சிக்கலிலிருந்து தப்பி செல்ல முயலும் சதீஷ் கூட்டாளிகளை  துப்பாக்கி முனையில் போலீஸ் சுற்றி வளைக்கிறது.கிளைமாக்ஸில் கதாநாயகி எடுக்கும் முடிவு தலைப்பை ஞாபகப்படுத்துகிறது.
கூட்டாளிக்கு கூட்டாளி என்றாவது ஒருநாள் வேட்டு வைப்பார்கள் என்ற ஒரு சஸ்பென்ஸ் இழையுடன் படத்தை நகர்த்தும் இயக்குனர் எஸ்கே.மதி கடைசிவரை பரபரப்புடன் அழைத்துச் செல்கிறார். சதீஷும் கூட்டாளிகளும் இணைபிரியாமல் வெவ்வேறு இடங்களிலும் விட்டுக்கொடுக்காமல் பேசுவது உண்மையான நட்பின் அடையாளம். முரட்டுத்தனம், கார் கடத்தும் இளைஞன் சதீஷை, பளிச்சிடும் பச்சைகிளியாக  சிவந்த தோலும், பெருத்த கண்ணுமாக வரும் ஹீரோயின் கிருஷ்ண குருப் காதலிக்கும்போதே இந்த காதல் எங்கோ முட்டிப்மோதப்போகிறது என்பதை கணிக்க முடிகிறது.
இன்ஸ்பெக்டராக வரும் கல்யாண் மாஸ்டர் வித்தியாசப்படுகிறார். மகள் மீது பாசம் ஒருபுறம் அவளது காதலன் சதீஷ் மீது கோபம் மறுபுறம் என திண்டாடி  கடைசியில் போலீஸ்தனத்தை காட்டி என்கவுட்டர் செய்வது அரங்கை அமைதியாக்குகிறது. டியூ கட்டாத கார்களை கடத்தி வரும் காட்சிகளை இன்னமும் வித்தியாசப்படுத்தியிருக்கலாம். பல காட்சிகள் விக்ரம் நடிப்பில் வந்த ஸ்கெட்ச் படத்தை நினைவூட்டுகிறது. எ டிட்டிங் வேலை பாக்கியிருக்கிறது என்பதுபோல் ஷெட்டு காட்சியும், பெட்டி கடை காட்சியும் அலுப்பு தட்டுகிறது. இன்னமும் 10 நிமிடம்வரை காட்சிகளுக்கு கத்தரிபோட்டால் ஸ்கிரிப்ட் ஸ்கிரிப்பாக இருக்கும்.  பிரிட்டோ மைக்கல் பாடல்கள் ஓ.கே.
கூட்டாளி – நீளத்தை குறைத்தால் கூட்டாளியாவான்
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close