Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்விமர்சனம்

சார்லி சாப்ளின்-2′ – விமர்சனம்

சார்லி சாப்ளின் படத்தைத் தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  பிரபுதேவா மேட்ரி மோனி வைத்து நடத்துபவராக நடித்துள்ளார். ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று அவரது குடும்பத்தார் கவலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை பார்த்து காதலில் விழுகிறார் பிரபு தேவா. ஒழுங்காக செல்லும் காதலில் அதா ஷர்மாவால் பிரச்சனை ஏற்படுகிறது. பிரபு தேவா தவறு செய்யவில்லை என்பதை அறியாத நிக்கி கல்ராணி அவரை அடிக்கடி சந்தேகபட்டுக்கொண்டே இருக்கிறார்.  பிறகு சண்டைகள் ஓய்வு அடைய இறுதியில் எப்படியோ நிக்கி கல்ராணிக்கும் பிரபுதேவாவுக்கு  திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகின்றனர். அங்கு இரு குடும்பங்களுக்குள் நடக்கும் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின் 2’. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது தான் இப்படத்தின் சஸ்பென்ஸ். 

பிரபுதேவாவுக்கு அவருக்கு காமெடி என்பது கைவந்த கலை போல, அதிலும் ஆள்மாறாட்டம், சமாளிப்பது போன்ற விஷயதில் புகுந்து விளையாடுகின்றார். அத்தனை வித்தைகளையும் இறக்குவதால் அவரின் கதாபாத்திரத்தில் சிக்ஸர் அடித்துள்ளார் பிரபுதேவா. அந்த நேரத்தில் பிரபுதேவா நண்பர் நிக்கி ஒருவரை முத்தமிடும் வீடியோவை அவரிடம் காட்ட, பிரபுதேவா வீடியோ காலில் செம்ம திட்டு திட்டுகின்றார். அதை தொடர்ந்து தான் தெரிகிறது. அந்த முத்தம் கடலில் விழுந்த ஒருவர் உயிரை காப்பாற்ற கொடுத்தது என்று, அதே நேரத்தில் அந்த வீடியோ மெசேஜை நிக்கி இன்னும் பார்க்கவும் இல்லை, அதற்குள் அந்த மெசேஜை அழிக்க பிரபுதேவா அவருடைய நண்பர்கள் முடிவு செய்ய பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை. ஒரு பொய்யை சொல்லிவிட்டு அதை மறைக்க போராடும் ஒரு சில காட்சிகளும், பிரபுதேவாவின் காமெடி காட்சிகளும் படத்திற்க்கு ப்ளஸாக அமைந்துள்ளது. க்ளைமேக்ஸ் காட்சி ஓகே. ஆனால் படத்தில் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லை. மொத்தத்தில், தியேட்டருக்கு சென்று கொஞ்சம் சிரித்தாள் போதும் என்பவர்களுக்கு இந்த படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close