Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

தலைவாவை தொடர்ந்து தலைவி – விஜயின் அடுத்த படைப்பு.!

தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகையாக தமிழக அரசியலில் இரும்பு மனுஷியாக விளங்கியவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா.
 
இவரது மறைவை தொடர்ந்து இவருடைய வாழ்க்கையை படமாக எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
ஏற்கனவே iron lady என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் நித்யா மேனன் ஜெயலிதாவாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது விஜயும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளார். 
 
ஜெயலிதாவின் பிறந்த நாளான நேற்று அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு தலைவி என பெயர் சூட்டியுள்ளனர்.
 
இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார். Vibri மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மேலும் இப்படத்தில் ஜெயலலிதாவாக யார் நடிப்பார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close