Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

துருவ் விக்ரமுக்கு அடித்தது யோகம் – வர்மா படத்தின் இயக்குனர் இவரே.!

துருவ் விக்ரமுக்கு அடித்தது யோகம் – வர்மா படத்தின் இயக்குனர் இவரே.!
 
பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்துள்ள திரைப்படம் வர்மா. இம்மாதம் திரைக்கு வர இருந்த இப்படம் அர்ஜுன் ரெட்டியுடன் கொஞ்சமும் ஒத்து போகாததால் குப்பைக்கு போனது நாம் அனைவரும் அறிந்ததே.
 
இதனையடுத்து மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் புதிய இயக்குனர் மற்றும் டீமுடன் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
 
அதன் பிறகு இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அதுவும் உண்மை இல்லை. 
 
தெலுங்குவில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்காவையே இயக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறதாம்.
 
சந்தீப் ரெட்டி வங்கா தற்போது அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு தமிழுக்கு வருவார் அல்லது அவரின் உதவி இயக்குனரான கிரிசாயா இயக்குவார் என தகவல்கள் கிடைத்துள்ளன. 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close