Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

பாபி சிம்ஹாவின் ‘அக்னி தேவி’ படத்திற்கு நீதிமன்றம் தடை…!

தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பாபி சிம்ஹா. பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜான்பால்ராஜ் மீது புகார் அளித்துள்ளார். அதில் “கடந்த 2018ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் என்பவர் இயக்கத்தில் ‘அக்னிதேவ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். இந்தப் படத்தில் ஐந்து நாட்கள் நடித்தேன். அப்போது என்னிடம் சொன்ன கதை படி படம் எடுக்காமல், வேறு கதையில் படம் எடுத்ததால் அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்றேன். மேலும் நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்கச் சொன்னேன். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் படத்தில் நடிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ‘அக்னி தேவ்’ படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி வரும் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்” என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
மேலும் ‘அக்னி தேவி’ என்ற படத்திற்கும் தனக்கும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும், தான் ‘அக்னி தேவ்’ படத்தில் நடித்த சில காட்சிகளை வைத்து மோசடியாக தனது முகத்தை வைத்தும், குரல் மாற்றம் செய்தும் டிரைலர் வெளியிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ஜான்பால்ராஜ் மீது காவல்துறையினர் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்க பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் ‘அக்னி தேவி’ படத்திற்கு தடை கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தினை வெளியிட ‘ஸ்டேட்டஸ்கோ’ 20/03/19 பிறப்பித்துள்ளது. மேலும் நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, மேற்படி படத்தினை வெளியிடுவதில் முன்பிருந்த நிலையே தொடரும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close