Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
 
சின்னத்திரையில் பிரபலமான பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படம் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். 
 
முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது நடிப்பில் மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
 
மேலும் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
ரா.கார்த்திக் இயக்க இருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close