Advertisement
செய்திகள்

மீண்டும் திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா!

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. இந்த நிலையில், ‘காக்க காக்க’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘காக்க காக்க 2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘காக்க காக்க 2’ படத்திலும் சூர்யா – ஜோதிகாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close