Advertisement
Film Todayசினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் படத்துக்காக பாடி பாராட்டிய அனிருத்.!

ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படத்தில் அனிருத் பாடியுள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இசையமைப்பாளராக விளங்கி வருபவர் அனிருத். இவர் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  என்ற படத்தில் கண்ணம்மா என்ற பாடலை பாடியுள்ளார்.
 
நாயகனின் காதல் குணாதிசயங்களை ரசிகர்களுக்கு அனிருத்தின் மந்திர குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் படக்குழுவினர் அனிருத்தை அணுகினர்.
 
அனிருத்தும் மறுப்பு தெரிவிக்காமல் இந்த படத்திற்கு பாடி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹரிஷ் கல்யாணின் நடிப்பையும் பாராட்டியுள்ளார். 
 
படத்தின் கதை குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளபடி, எதிர் எதிர் முனையில் இருக்கும் ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த பிடிவாதமான காதல் திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். 
 
நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் ஜோடியாக நடிக்க, நடிகர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பால சரவணன் காமெடியில் கலக்குகிறார்கள். 
 
இந்த அழகான காதல் கதையை “புரியாத புதிர்” புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்திருக்கிறார்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close